Summer Care : வயிற்றை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள இந்த உணவுகளை சாப்பிடுங்க!
நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணியை சேர்த்துக்கொள்ளும் போது, உடலை குளிர்ச்சியாகவும் நீரோட்டத்துடனும் வைக்கலாம். தர்பூசணியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவித்து குடல் ஆரோக்கியதை மேம்படுத்த உதவுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகோடை வெயிலை சமாளிக்க இளநீர் ஒரு சிறந்த பானமாகும். இதில் எலக்ட்ரோலைட்டுகள் அதிகளவில் உள்ளதால் உடலை நீரோட்டத்தோடு வைத்திருக்க உதவும். இதில் உள்ள பொட்டாசியம், குடல் இயக்கத்தை பராமரிக்கவும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும் உதவலாம்
தயிர் போன்ற புரோபயாடிக் நிறைந்த உணவுப் பொருட்கள் கோடை வெயிலுக்கு மிகவும் அவசியம். புரோபயாடிக் உணவுகள் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இஞ்சியில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் செரிமான பிரச்சினையை சீராக்கலாம். வெப்பத்தினால் ஏற்படும் வயிற்று வலியை சரி செய்யலாம்.
நீர்ச்சத்து நிறைந்த சுவை மிகுந்த பழம் பப்பாளி. பாப்பைன் மற்றும் சைமோபாபைன் போன்றவை உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுகிறது. அதேசமயம் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவும் உதவலாம்
நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுக்கலாம். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கலாம். இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் அப்படியே சாப்பிடலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -