Black Coffee: பிளாக் காபி பிரியரா நீங்கள்..?அதை குடிப்பதால் என்னென்ன பிரச்சினைகள் வரும் தெரியுமா?
சோர்வாக உணரும்போதோ, மன அழுத்தம் ஏற்படும்போதோ, வேலைகள் செய்து களைத்து போகும்போதோ, காபி குடிப்பது வழக்கமான ஒன்று.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதிலும் உடல் எடையை குறைப்பவர்கள், டயட்டில் இருப்பவர்கள் பால் சேர்க்காமல் காபி குடிக்க விரும்புவர். அப்படி குடிப்பதனால் என்னென்ன வ்ளைவுகள் வரும் என்பதை யாரும் நினைத்து பார்ப்பதில்லை.
அதன்படி, பிளாக் காபியை அதிகம் குடிப்பது குடல் ஆரோக்கியத்தை மோசமாக்கும்
மேலும், பிளாக் காபி குடிப்பது உங்கள் இயற்கையான தூக்கத்தை பாதிப்பதோடு, அதிகநேரம் விழித்திருக்கச் செய்கிறது. அதனால்தான் வேலை, அலுவலகம் அல்லது படிக்கும் நேரத்தின் போது பலர் காபி குடிக்கின்றனர்.
கூடுதலாக, அமிலத்தன்மை, பசியின்மை, நெஞ்செரிச்சல் மற்றும் வாய்வு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.
கர்ப்பமாக இருப்பவர்கள், பாலூட்டுபவர்கள், அமில வயிற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிளாக் காபியை குடிப்பதை தவிர்க்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -