Non Vegetarian Foods : இரவில் அசைவ உணவு சாப்பிடலாமா? இதனால் ஏதாவது பிரச்சினை வருமா?
அசைவ உணவானது பொதுவாக ஜீரணிக்க நேரம் எடுக்கும். எனவே பெரும்பாலும், இரவு நேரங்களில் சிக்கன், மட்டன், மீன் ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎந்த வயதினராக இருந்தாலும், இரவில் அசைவ உணவு வகைகளை தவிர்க்கவும். இரவில் அசைவ உணவு சாப்பிடுவதால் செரிமானம் ஆகாமல் போகலாம், வாந்தி, வயிற்று வலி போன்ற தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.
ஒரு வேலை எப்பொழுதாவது இரவில் அசைவ உணவு சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு ஏற்படாமல் இருக்க , சாப்பிட பின் வெந்நீர் அல்லது வெற்றிலை சாப்பிடுவது நல்லது . வழக்கமாக இரவில் அசைவ உணவு சாப்பிட்டு வந்த குடல் ஆரோக்கியம் கெடலாம்.
இரவில் அதிக கலோரிகள் கொண்ட அசைவ உணவுகளை சாப்பிடும் போது உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம் .
இரவில் அசைவம் சாப்பிடுவதால் காலையில் பசி எடுக்காமல் போகலாம். இது பசியின்மை பிரச்சினையை உண்டாக்கலாம். இதனால் நாள் முழுவதும் உடல் சோர்வாக இருக்கும்.
இரவு நேரத்தில் இறைச்சி அதிக அளவு சாப்பிடுவதால் கொலஸ்டரால் அதிகரிக்கலாம். அதிகப்படியான கலோரி கொழுப்பாக மாறி, உடல் எடையை கூட்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -