gooseberry : நெல்லிக்காய் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? லிஸ்ட் இதோ!
நீண்ட ஆயுளையும் உடல் பலத்தையும் தரக்கூடிய நெல்லிக்காயானது, இந்திய மக்களிடையே பயன்பாட்டில் நிறைந்து காணப்படுகிறது தேன் நெல்லிக்காய்,நெல்லிக்காய் ஊறுகாய் மற்றும் பச்சையாக நெல்லிக்காயை உண்பது என, நெல்லிக்காயின் பயன்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அகற்றி, ஆரோக்கியமான சருமத்தை வழங்குகிறது.
நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும்.
நெல்லிக்காயை தினமும் சாப்பிடுவதால் ஜலதோஷம் பிடிக்கும் என்று பரவலான நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாக அப்படி இல்லை.ஏனெனில் நெல்லிக்காய் சிறந்த நோய் எதிர்ப்பு உணவாகும்.
வைரஸ் மூலம் பரவும் நோய்களை எதிர்க்கும் தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு.
வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால்,காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -