Watermelon: மது அருந்துபவர்களா நீங்கள்..? தர்பூசணி பழம் சாப்பிடலாமா..? இதைப்படிங்க..!
கோடை காலத்தில் சரளமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தான் தர்பூசணி. தர்பூசணி பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் எந்த உணவாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் நஞ்சு தான்.
அதேபோல் தான் தர்பூசணி பழமும். இதனை அதிகமாக சாப்பிட்டால் சில உடல் உபாதைகள் ஏற்படும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தர்பூசணி பழத்தில் 90% நீர்சத்து நிறைந்துள்ளது. உடலில் ஏற்கனவே நீர்சத்து அதிகம் இருக்கும் நபர்கள் இந்த தர்பூசணியை அதிகம் சாப்பிட்டால் உடல் சோர்வு, கை, கால் வீக்கம் ஏற்படும்.
image 4
மேலும் மது பழக்கம் இருப்பவர்கள் தர்பூசணியை அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது. குறிப்பாக மது அருந்தும் போது தவிர்ப்பது நல்லது. அப்படி அதிகம் எடுத்துக் கொண்டால் அது கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் கொழுப்புப் பிரச்சினைகளை உருவாக்கும் என கூறுகின்றனர்.
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருந்தாலும் சர்க்கரை அளவும் அதிகம் காணப்படுகிறது. அதனால் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் தர்பூசணியை மிகக் குறைவாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.