Wood apple : கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இருக்கவே இருக்கு விளாம்பழம்!
விளாம்பழம் வயிற்றின் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. இதில் ஆன்டிஆக்ஸிடென்ட் பண்புகளை அதிகம் இருப்பதால் வயிற்றில் இருக்கும் புண்களைக் குணப்படுத்த உதவுகிறது.
விளாம்பழத்தில் ஆன்டி-பாக்டீரியல் பண்பு அதிகம் இருப்பதால் தோல் சம்பதபட்ட பல்வேறு பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது மற்றும் தோல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
விளாம் பழத்தின் பிசினை இரவு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் வடிகட்டி சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் ஆகிய பிரச்சனைகள் தீர உதவும்
விளாம் பழத்தில் டையுரெடிக்(Diuretic) தன்மை இருப்பதால் இது சிறுநீரகத்தின் அதிகப்படியான சோடியத்தை உடலில் இருந்து சிறுநீர் வடிவில் அகற்ற உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது
விளாம்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் முலம் இரத்த ஓட்டத்தில் கார்போஹைட்ரேட்டுகளின் ஓட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயின் வளர்ச்சியை குறைக்கிறது. உடம்பின் சர்க்கரை அளவின் அதிகரிப்பை தடுப்பதில் இது ஒரு முக்கியமான செயல்பாட்டைச் செய்கிறது.
விளாம்பழத்தில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் (antimicrobial) தன்மை முடி மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுவது மட்டுல்லாமல் தலைஅரிப்பு மற்றும் பொடுகை குணமாக்க உதவுகிறது.