Guava Leaves : கொய்யா இலை டீ கேள்விப்பட்டிருக்கீங்களா? இதில் இவ்வளவு நன்மைகளா?
கொய்யா இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீரில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகொய்யா மற்றும் அதன் இலைகள் இரண்டிலும் வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும்.
கொய்யா இலையில் காணப்படும் பல்வேறு வகையான ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் சேர்மங்கள் மிருதுவான சருமத்திற்கு உதவும்.
கொய்யா இலையில் டீ போட்டு குடித்தால் உடல் எடையை குறைக்க உதவும்.
கொய்யாவின் இலைகளில் போதுமான அளவு பொட்டாசியம் உள்ளது. அதே நேரத்தில் முழு பழத்திலும் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இவை இரண்டும் அதிகரித்த இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகின்றன.
மேலும், கொய்யா இலையில் டீ போட்டுக் குடிப்பது உடல் வீக்கம், உயர் இரத்த சர்க்கரை அளவு, நீரிழிவு மற்றும் இதர பிரச்னைகளுக்குச் சிறந்த தீர்வாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -