Health Tips: பாதாமை ஊறவைத்துச் சாப்பிடுவது நல்லதா..? கெட்டதா..?
பாதாம் அனைவரும் சுவைக்க விரும்பும் பருப்பு வகைகளில் ஒன்றாகும். அவற்றை பச்சையாக சாப்பிடுவது முதல் புட்டிங் மற்றும் மில்க் ஷேக் ஆகியவற்றில் சேர்ப்பது வரை, அவை பல்வேறு வழிகளில் உட்கொள்ளப்படுகின்றன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.
தினமும் 3-4 பாதாம் பருப்புகளை காலையில் அதன் தோலை நீக்கி சாப்பிடும் போது உங்களுக்கு அன்றைக்கு தேவையான உடனடி ஆற்றலை நீங்கள் காலை முதலே பெற்றுக்கொள்ளலாம்.
உலர் திராட்சை, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள் நீங்கள் திண்பண்டங்களாக சாப்பிடும் பொழுது பாதாம் பருப்பையும் மக்கள் அதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
தினமும் 6-8 பாதாம் பருப்பினை விட அதிகப்படியாக உட்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நமக்கு அதிகப்படியான எடை அதிகரிப்புக்கு வழிவகுப்பதோடு, உடலில் வெப்பத்தையும் அதிகரிக்கிறது.
எனவே தினமும் 3-4 பாதாம் பருப்பினை மட்டும் உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -