Peanuts : உங்கள் வீட்டின் சுட்டிக்குழந்தை சோர்வாக இருக்காங்கலா? அப்போ வேர்க்கடலையை குடுத்து பாருங்க!
வேர்க்கடலையில் புரதம், ட்ரிப்டோபான், திரியோனின், ஐசோலூசின், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பி உள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆகவே அவித்தோ அல்லது வறுத்த வேர்க்கடலை எதுவாகிலும், தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வரும்போது, மேற்கண்ட சத்துக்கள் அனைத்தும் நம் உடலுக்கு வந்து சேரும்.
மேலும், வேர்க்கடலை வெயில் மழை மற்றும் குளிர்காலத்திற்கு உகந்த உணவாக இருக்கும்.
வேர்க்கடலையில் மக்னீசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால், வயதான காலங்களில் ஏற்படும், எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் தவிர்க்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு தினமும், அவித்தோ அல்லது வறுத்த வேர்க்கடலையையோ அவர்கள் உடலுக்கு ஏற்றவாறு, தயாரித்து கொடுத்தால்,அவர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
எடை குறைப்பு, மூளையின் சுறுசுறுப்பு தன்மை மற்றும் சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ள உகந்த உணவு வேர்க்கடலை
- - - - - - - - - Advertisement - - - - - - - - -