Anti Ageing Tips : வயதானாலும் இளமையாக இருக்க ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!
வயதாக நம் உடலில் வாதம் அதிகரிக்கும். இதனால் மூட்டு வலி, தூக்கமின்மை, ஞாபக மறதி, சரும வறட்சி, ஏற்படுவதுடன் எலும்புகள் பலவீனமாகும்
அதனால் வாதத்தை சீராக கட்டுக்குள் வைக்க வேண்டும். மூக்கிற்குள் சிறிதளவு நல்லெண்ணெயை விடலாம். காலையில் தினமும் நல்லெண்ணெயை சூடாக்கி உடம்பில் தேய்த்து மசாஜ் செய்து குளிக்கவும்
நாடி ஷோதன பிராணயாமாம் செய்ய வேண்டும். 20 நிமிடங்களுக்கு தியானம் செய்ய வேண்டும். பொறுமையாக செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
ஆயுர்வேத மருத்துவரிடம் சென்று பஞ்சகர்மா செய்துக்கொள்ளலாம். தினமும் நெல்லிக்காய் சாப்பிட வேண்டும். தினமும் ப்ரெஷ்ஷான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
உப்பு, காரம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். காய்கறி சூப் வகைகளை, பழச்சாறுகளை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும்.
டயட்டில் நெய் போன்ற நல்ல கொழுப்புள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவை சாப்பிடாமல் இருக்க கூடாது. லேட்டாகவும் சாப்பிட கூடாது.