Curd : இந்த நேரத்தில் எல்லாம் தயிரை கட்டாயம் சேர்க்க கூடாது.. தெரிஞ்சிக்க இதை படிங்க!
தனுஷ்யா | 21 Aug 2024 06:06 PM (IST)
1
சளி பிடித்து இருக்கும் போதோ, மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு இருந்தாலோ தயிரை சாப்பிட கூடாது. பித்தத்தை அதிகரிக்கும் இதை சூட்டினால் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சினைகளின் போது எடுத்துக்கொள்ள கூடாது.
2
இரவில் கபத்தன்மை அதிகமாக இருக்கும். கபத்தையும் அதிகரிக்கும் தயிரை இரவில் சாப்பிட்டால் உடலில் சளி சேரும், அஜீரண கோளாறு ஏற்படும்
3
தயிரை ஒருபோதும் சூடு செய்ய கூடாது. அப்படி செய்தால் தயிரின் தன்மை போய்விடும்
4
வாதம், பித்தம் என இரண்டையும் அதிகரிக்கும் தயிரை தினமும் உட்கொள்ளவே கூடாது. வாரத்தில் 2-3 முறை சாப்பிட்டால் போதுமானது
5
உடலில் வீக்கம் இருந்தால், தயிரை உட்கொள்ள வேண்டாம். ஏனென்றால் இது இருக்கும் பிரச்சினையை இன்னும் மோசமாக்கிவிடும்.