Yuvan Shankar Raja : யுவன் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் முடக்கம்.. இதுதான் காரணமா இருக்குமோ ?
லாவண்யா யுவராஜ் | 18 Apr 2024 02:00 PM (IST)
1
தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் யுவன் ஷங்கர் ராஜா.
2
இசைஞானி இளையராஜாவின் இளைய மகன். தன்னுடைய தனித்துவமான இசையால் ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்து உலக அளவில் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.
3
சமீபத்தில் அவரின் இசையில் GOAT படத்தில் இடம் பெற்ற 'விசில் போடு' பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கானது.
4
ஒரே நாளில் 15 மில்லியன் வியூஸ் பெற்று முந்தைய சாதனைகளை முறியடித்தது.
5
தற்போது யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கியுள்ளார்.
6
இந்த செய்தி அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7
இது GOAT படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் செய்வதற்கான ஸ்டேர்ஜியாக இருக்கலாம் என ரசிகர் தரப்பில் கருத்துக்கள் பரிமாறப்படுகிறது.