Paridhabangal Gopi : 'அழகிய மகள் பிறந்துள்ளாள்..' தகப்பனான பரிதாபங்கள் கோபி!
சசிகலா | 15 Jun 2023 01:02 PM (IST)
1
திருச்சியை சேர்ந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர். நெருங்கிய நண்பர்களான இவர்கள் கல்லூரியில் ஒன்றாக படித்து பின்னர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு சென்னைக்கு வந்து பல்வேறு சேனல்களில் வாய்ப்பு தேடினர்.
2
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற ஆடிஷன் சென்ற இவர்கள் தேர்வாகவில்லை.
3
இவர்களின் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால் கோபி- சுதாகர் சேர்ந்து ஒரு யூடியுப் சேனல் தொடங்கினர்.
4
இவர்கள் பல்வேறு நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமடைந்தவர்கள். இவர்களின் கண்டெண்டுகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
5
இந்நிலையில் கோபிக்கு கடந்த ஆண்டு யமுனா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இன்று கோபியின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது.
6
யூடியூபர் கோபி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ”தகப்பனானேன் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளாள்” என பதிவிட்டுள்ளார்.