3 Years of Mandela : 3 ஆண்டுகளை நிறைவு செய்த யோகி பாபுவின் மண்டேலா!
தர்மம் எனும் குறும்படத்தை இயக்கி, குரங்கு பொம்மை என்ற படத்திற்கும் வெள்ள ராஜா எனும் வெப் சீரிஸிற்கும் வசனம் எழுதிய மடோன் அஸ்வின் இயக்கிய முதல் படம் மண்டேலா
நகைச்சுவை நடிகரான யோகி பாபு, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலரை வைத்து இப்படத்தை உருவாக்கினார்.
கிராம புறத்தில் நடக்கும் தேர்தலில் இரு பிரிவினருக்கு இடையே நடக்கும் பிரச்சினைகளை இப்படம் காண்பித்து இருக்கும். தேர்தலை வெல்ல, யோகி பாபு ஒருவரே துருப்பு சீட்டாக இருக்க, அவரை சுற்றியே இப்படம் நகரும்.
மண்டேலா படம், கொரோனா காலட்டத்தில் நேரடியாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன் பின்னர், நெட்ஃபிளிக்ஸ் இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பெற்றது
நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படத்திற்கு எக்கசக்கமான விருதுகள் கிடைத்தது. குறிப்பாக, சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை படத்தின் இயக்குநரான மடோன் அஸ்வின் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டில் ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியான இப்படம் இன்றுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்கிறது