Yogi Babu : மீண்டும் ஒரு ஹீரோ படம்.. வெளியானது லக்கி மேன் படத்தின் டீசர்!
மண்டேலா, கூர்கா, பொம்மை நாயகி படத்தை தொடர்ந்து லக்கி மேன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் யோகி பாபு.
இந்த படத்தில் ராஜரத்தினம் பட புகழ் வீரா, போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
இதில் யோகி பாபுக்கு மனைவியாக வரும் ரேச்சல் ரெபேக்கா கடைசி விவசாயி மற்றும் குட் நைட் படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
நடிகரும், இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ளது இந்த திரைப்படம்
இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் சீன் ரோல்டன். இவர் இதற்கு முன்னர் ஜெய் பீம், முண்டாசுபட்டி, சதுரங்க வேட்டை, பா பாண்டி என்று 16 படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.
தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.