Nivin Pauly : 1 மில்லியன் பார்வைகளை கடந்த ஏழு கடல் ஏழு மலை படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ!
ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள எழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நேற்று மாலை வெளியானது.
இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவில் இயக்குநர் ராமிற்கே உரிய ஸ்டைல் தெரிகிறது
“ஒருத்தரை விட்டு ஒருத்தர் கிட்ட போறதுக்கு வேணா ஆயிரம் காரணம் இருக்கலாம்..ஒருத்தர் கூட ஒருத்தர் போறதுக்கு ஒரே ஒரு காரணம் மட்டும்தான் இருக்க முடியும்.. காதல்” என்ற மனதை உருக்கும் வசனத்துடன் தொடங்குகிறது க்ளிம்ப்ஸ் வீடியோ.
தற்போதைய காலத்தில் கதாநாயகனிடம் கதைக்கேட்டு கொண்டிருக்கிறார் வழிப்போக்கன் சூரி. பின், கதாநாயகியை கதாநாயகன் 4000 வருடங்களுக்கு முன் சந்திக்கிறார் என்பது விவரிக்கப்படுகிறது. தனக்கு தற்போது, 8,822 வயதாகிறது என்றும் கதாநாயகன் நிவின் பாலி கூறுகிறார்.
ஏழு கடல் ஏழு மலை படம் காலங்கள் கடந்தாலும் அழியாத காதலை பற்றிய கதை என்பது தெரிகிறது.
யுவன் ஷங்கர் ராஜாவின் பின்ணனி இசை வீடியோவுடன் ஒன்றிப்போகிறது. இப்படத்தில் சூப்பர் ஆல்பத்தை யுவன் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
மனதில் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்திய இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ ஒரு மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.