Flop Movies: இந்தியன் 2 முதல் கங்குவா வரை! 2024-ஆம் ஆண்டு தோல்வியை சந்தித்த பிக் பட்ஜெட் படங்கள்!
தியேட்டருக்கு வரும் எல்லா படமும் வெற்றி கொடுப்பதில்லை. அதில் ஒரு சில படங்களைத் தவிர மற்ற படங்கள் குறைவான வசூல், நெகட்டிவ் விமர்சனம், தோல்வி என்று ஏதாவது ஒரு பட்டியலில் சேர்ந்துவிடுகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் திரைக்கு வந்து தோல்வி கொடுத்த மாஸான படங்களைப் பற்றி பார்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில் திரைக்கு வந்த படம் இந்தியன் 2. கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்திற்கு எதிர்மறை விமர்சனம் தான் மிஞ்சியது. இந்தியன் படத்தை போன்று இந்தப் படத்தில் கதையும் இல்ல, கதாபாத்திரங்களும் இல்லை. ஒவ்வொரு முறையும் போலீசாரால் சுற்றி வளைக்கப்படும் இந்தியன், எஸ்கேப் ஆகி கடைசியில் மக்களிடம் சிக்கி அவர்களால் விரட்டியடிப்பது போன்ற கதை, மக்களை ஏமாற்றவே செய்தது. மொத்தத்தில் படம் ரசிகர்களுக்கு பிடிக்காத தோல்வி படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது. இதில் இந்தியன் 3 படமும் வரப் போகிறதாம். பொதுவாக முதல் படம் ஹிட் கொடுத்தால் பார்ட் 2, பார்ட் 3 படங்கள் எல்லாம் ஹிட் கொடுப்பதில்லை. இதற்கு தமிழ் சினிமாவில் பல படங்களை உதாரணங்களாக சொல்லலாம்.
இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரது நடிப்பில் திரைக்கு வந்த படம் தான் அயலான். சயின்ஸ் பிக்ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படம் விண்கல்லில் சிதறிய ஒரு பொருள் வில்லனிடம் கிடைக்கிறது. அதை வைத்து எரிபொருள் வளங்களை எடுக்க பூமியின் மையப்பகுதியை தோண்டி எடுக்கும் திட்டத்தை தொடங்குகிறார். இந்த திட்டத்தால் பூமி அழியும் நிலை ஏற்படும் என்பதை அறிந்த வேற்றுகிரகவாசிகளில் தங்களில் ஒருவனை பூமிக்கு அனுப்புகிறார்கள். அப்படி பூமிக்கு வரும் வேற்றுக்கிரகவாசி ஹீரோ சிவகார்த்திகேயனுடன் இணைந்து வில்லனிடம் மோதி அந்த பொருளை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பது தான் கதை. இந்தக் கதை பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. ரசிகர்களை ஏமாற்றிய படமாகவும் அமைந்தது.
கோலார் தங்க வயல் மற்றும் பூர்வ குடி மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தான் தங்கலான். இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோர் பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.150 கோடி வரையில் வசூல் குவித்தது. இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. அதே போன்று தான் மாளவிகா மோகனின் நடிப்பும். ஆனால், படத்தை கொண்டு சென்ற விதம் மக்கள் மனதை கவர தவறியதால் இந்த படம் தோல்வியை சந்தித்தது.
எல்லா படங்களிலும் பார்த்த கதை தான் என்றாலும் தவறான என்கவுண்டரால் அப்பாவி ஒருவன் சுடப்படுவதும் பின்னர், தான் செய்தது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை அறிந்து உண்மையை கண்டுபிடிக்கும் கோதாவில் இறங்குவதும் தான் வேட்டையன். படத்திற்கு இன்னும் அழுத்தம் கொத்திருக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு ஹீரோ மற்றும் வில்லன் கிளைமேக்ஸ் காட்சிகள் இருந்தது. ஜெய் பீம் பட இயக்குநர் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், அபிராமி, துஷாரா விஜயன் ஆகியோர் பலர் நடிப்பில் திரைக்கு வந்த இந்தப் படம் ரூ.300 கோட் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கடைசியில் ரூ.260 கோடி வரையில் வசூல் குவித்தது.
இதுவரையில் சூர்யா நடிப்பில் வந்த படங்களில் அதிகளவில் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்த படங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது கங்குவா தான். ரிலீஸ் ஆனது முதல் தொடர்ந்து எதிர்மறை விமர்சனத்தை சந்தித்த கங்குவா ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. கடைசியில் ரூ.100 கோடி மட்டுமே வசூலில் நெருங்கியிருக்கிறது. இந்தப் படத்தை பற்றி விமர்சிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்தளவிற்கு விமர்சனங்களை சந்தித்தது. இதனால், சூர்யா மற்றும் இயக்குநர் சிவாவிற்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது தான் மிச்சம். ஒரு படம் தோல்வி கொடுத்தால் பரவாயில்லை. நடிக்கிற படங்கள் எல்லாமே தோல்வியா அமைந்தால் என்ன செய்வது என்று கேட்கும் அளவிற்கு கடந்த 11 ஆண்டுகளாக தோல்வி படங்களையே கொடுத்துக் கொண்டு வருகிறார் சூர்யா.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -