Year Ender: சோகத்தின் உச்சம்; 2024 ஆம் ஆண்டு உயிரிழந்த பிரபலங்கள் இத்தனை பேரா?
ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார். விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபுற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சீரியல் நடிகர் நேத்ரன் (45) டிசம்பர் 3ஆம் தேதி உயிரிழந்தார். இவர்,பொன்னி, பாவம் கணேசன், மன்னன் மகள், மகாலட்சுமி, ரஞ்சிதமே போன்ற தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், தெகிடி, இரும்புத்திரை, லிப்ட் போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் பிரதீப் கே விஜயன். இவர் 45ஆவது வயதில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் சிஐடி சகுந்தலா. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கும், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர், செப்டம்பர் 18ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 84. அருணாச்சலம் சகுந்தலா என்ற சிஐடி சகுந்தலா கிட்டத்தட்ட 600க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்திருக்கிறார்.
இதே போன்று தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்த விஸ்வேஷ்வர் ராவ் ஏப்ரல் 2 ஆம் தேதி உயிரிழந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
கடந்த மார்ச் 27ஆம் தேதி லொள்ளு சபா சேஷூ (61) காலமானார். இவரது இயற்பெயர் லட்சுமி நாராயணன் சேஷூ என்பது குறிப்பிடத்தக்கது.
மாரச் 29ஆம் தேதி வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்களில் தளபதி விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். காதல் கொண்டேன், என்னை அறிந்தால், பைரவா, பிகில் ஆகிவை இவர் நடித்த படங்களில் சில. 'ஏப்ரல் மாதத்தில்' படத்தின் மூலமாக சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் டேனியல் பாலாஜி. சினிமாவில் அறிமுகமான காலகட்டங்களில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். அப்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வந்த காக்க காக்க படத்தில் நடித்து பிரபலமானார். கமல் ஹாசன் நடிப்பில் வந்த வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் உச்சநட்சத்திர வில்லனாக நடித்தார். அதன் பிறகு பல படங்களில் வில்லனாக நடித்தார். தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். என்னதான் படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் ஒரு ஹீரோ. இவர், ஆவடியில் ஒரு அம்மன் கோயில் ஒன்றையும் கட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் சிம்மாசனம், டெல்லி கணேஷ் நவம்பர் 9ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். வில்லன் கதாபாத்திரம், குணச்சித்திர வேடங்களில் ஏராளமான படங்களில் நடித்தவர். மகனுக்காக தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். 10 வகுப்பு முடித்த கையோடு டிவிஎஸ் மோட்டார் கம்பெனியில் வேலையில் சேர்ந்தார். 1964 முதல் 1974 ஆம் ஆண்டு வரையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் விமானப் படையில் பணியாற்றியிருக்கிறார். அந்த வேலையை உதறிவிட்டு சினிமாவில் நடிக்க வந்துள்ளார். 700-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பருத்திவீரன் பட புகழ் செவ்வாழை ராசு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல் நலக் குறைவு காரணாமாக உயிரிழந்தார். 2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு சோகமான ஆண்டாக அமைந்தது என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -