Keerthy Suresh: கீர்த்தி சுரேஷுக்கு பாலிவுட் ராசி இல்லையா? ட்ரோல் பண்ணும் நெட்டிசன்கள்!
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் 'பேபி ஜான்'.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇயக்குனர் அட்லீ தயாரிப்பில், காளீஷ் இயக்கத்தில் வெளியான இந்த படம்... 2016ஆம் ஆண்டு தளபதி விஜய்யை வைத்து மிரட்டல் ஹிட் கொடுத்த அட்லீயின் 'தெறி' பட ரீமேக்காக வெளியானது.
முதல் நாள் 11 கோடிக்கு மேல் வசூல் செய்தாலும், அடுத்தடுத்தது வசூலில் சரிவை சந்திக்க துவங்கி விட்டது. கிட்ட தட்ட இந்த படம் அட்லீளுக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் தான், கீர்த்தி சுரேஷுக்கு பாலிவுட் ராசி இல்லை என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். அதாவது, கீர்த்தி சுரேஷ் முதல் முதலில் பாலிவுட்டில் நடிக்க கமிட் ஆன திரைப்படம் 'மைதான்'.
உடல் எடையை அதிகம் இளைத்ததன் காரணமாக இந்த படத்தின் வாய்ப்பை இழந்தார். இதை தொடர்ந்து, தான் அட்லீ தயாரித்த 'பேபி ஜான்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த படம் படு மோசமான தோல்வியை சந்தித்துள்ளதால், கீர்த்திக்கு நார்த் இந்தியன் படங்கள் ராசி இல்லை என ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -