KGF Yash : எதிர்பார்ப்பார்ப்புகளும் யதார்த்தங்களும்.. ஆசை மனைவிக்கு ஸ்பெஷல் போஸ்ட் பதிவிட்ட யஷ்!
யஷ் என்கிற நவீன் குமார் கவுடா 2005ல் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து, 2007ல் கன்னட வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்தார்.
தமிழில் சூப்பர் ஹிட்டான களவானி, சுந்தர பாண்டியன் ஆகிய படங்களின் கன்னட வெர்ஷனில் நடித்துள்ளார். பல காலமாக நடித்து வந்த இவருக்கு, கே.ஜி.எஃப் திருப்பு முனையாக அமைந்து புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
கே.ஜி.எப் முதல் பாகத்தையடுத்து வெளியான இரண்டாம் பாகம் மாபெரும் வெற்றி பெற்றது. 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த பிரஷாந்த் நீலின் படம், இவருக்கு பான் இந்திய ஸ்டார் அடையாளத்தையும் கொடுத்தது.
பின்னர், இவரை இன்ஸ்டா பக்கத்திலும் ட்விட்டர் பக்கத்திலும் பலர் ஃபாலோ செய்ய தொடங்கினர். அடிக்கடி தன் மனைவியுடன் எடுத்த புகைப்படத்தையும் குடும்ப புகைப்படத்தையும் பதிவிடுவார்.
தற்போது, என் மனைவியின் எதிர்பார்ப்பார்ப்புகளும் யதார்த்தங்களும் என்ற கேப்ஷனுடன் ஒரு போஸ்டை பதிவிட்டுள்ளார்.
இந்த புதிய புகைப்படங்களை பார்க்கும் போது, யஷ்ஷின் மனைவி, அவருடன் தனியாக நேரத்தை செலவிடலாம் என எதிர்ப்பார்க்கின்றனர் என்பதும் அவர்களின் குழந்தைகளை எங்கு சென்றாலும் அழைத்து செல்ல வேண்டும் என்ற யதார்த்தமான விஷயம் உள்ளது என்பதும் தெரிகிறது.