Atlee Priya : வித்தியாசமான பெயரை சூட்டிய அட்லி பிரியா...மீர் என்றால் என்ன?
கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் பட்டறையில் தொடங்கி, இன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை இயக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளவர் இயக்குநர் அட்லீ.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவரும் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமாகி தொலைக்காட்சி, சினிமா என பிரபலமாக வலம் வந்த ப்ரியாவும் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
காதல் பறவைகளாக வலம் வந்து சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்த இந்த ஜோடி, தொடர்ந்து வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழும் புகைப்படங்களைப் பதிவிட்டு லைக்ஸ் அள்ளி வந்தனர்.கடந்த ஆண்டு ப்ரியா கருவுற்றிருக்கும் செய்தியை அட்லீ அறிவித்தார்.
இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் ப்ரியா - அட்லீ தம்பதி ஆண் குழந்தைக்கு பெற்றோராகினர். சுமார் 4 மாதங்கள் கழித்து ப்ரியா - அட்லி தம்பதி தங்கள் குழந்தையின் பெயரை சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர்.
அக்குழந்தைக்கு மீர் எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மீர் என்றால் தலைமை தாங்குபவர், தலைவர் என பொருள்படும்.
நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கி வரும் ஜவான் படம் செப்.7ஆம் தேதி வெளியாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து விட்ட நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -