World water day : ‘நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே..’ நீரின் மகிமையை உணர்த்தும் தமிழ் பாடல்கள்!
உலக தண்ணீர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் அணுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் உலக தண்ணீர் தினத்தையொட்டி, நீரின் மகிமையை போற்றும் தமிழ் சினிமாவின் பாடல் வரிகளை காண்போம்..
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசின்ன சின்ன தூறல் : “உனது தூறலும் இனிய சாரலும் தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா நனைந்த பொழுதினில் குளிர்ந்த மனதினில் ஏதோ ஆசை துளிர்க்குதம்மா..”மழையை ரசிக்கும் ரசிகனின் மனதில் இருந்து நேரடியாக உதிர்ந்த பாடல்.
சின்ன சின்ன மழைத்துளிகள் : “சக்கரவாகமோ மழையை அருந்துமாம் நான் சக்கரவாகப் பறவை ஆவேனோ மழையின் தாரைகள் வைர விழுதுகள் விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ..”மழையின் அழகை விவரித்து பாடும் பாடல் இது.
நதியே நதியே : “நடந்தால் ஆறு எழுந்தால் அருவி…நின்றால் கடலல்லோ…தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்…ஓஹோ…தண்ணீர் கரையில் முடிக்கிறோம்…ஓஹோ…”நதியையும் பெண்ணையும் ஒப்பிட்டு பாடும் பாடலாக நதியே நதியே அமைந்திருக்கிறது.
மூங்கில் காடுகளே : “தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே..” இந்த பாடலில் கவிஞர் இயற்கையின் அழகைக் குறித்து பாடியிருப்பார். அதில் நீர் வீழ்ச்சி குறித்து வரிகளே இவை.
சொட்ட சொட்ட : “நீருக்கும் நமக்கும் ஒரு தேவபந்தம் அன்பே உருவானது..”நீருக்குள் முகம் பார்த்த ஜோடியை, மீண்டும் மழை சேர்த்தது. இது காதலிக்காக காதலன் பாடுவது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -