‘நீரின் அருமை அறிவாய் கோடையிலே…’ தண்ணீரை சேமிக்க சில டிப்ஸ் இதோ!
ஷவரில் அதிக நேரம் குளிப்பதை குறைக்கலாம் பல்துலக்கும் போதும் கைகளை கழுவும் போதும் தண்ணீர் வீணாவதை தவிர்க்கலாம்
வீட்டில் உள்ள குழாய்கள் கசிதலை சரி செய்தல். உபயோகம் இல்லாத போது டேப்பை மூடி வைத்தால், தண்ணீரை சேமிக்கலாம்.
வீட்டின் அருகில் உள்ள ஏறி , குளத்தை தன்னார்வலர்களுடன் சேர்ந்து நாமமும் சுத்தம் செய்யலாம் .
உள்ளூர் மற்றும் பருவகால உணவுகளை உண்ணுதல். உணவு உற்பத்திக்கு அதிகம் தண்ணீர் தேவைப்படும் உணவுகளை தவிர்ப்பது நல்லது
உணவுக் கழிவுகள், மருந்துகள், நெகிழிகள் மற்றும் ரசாயனங்களை கழிப்பறை அல்லது நீர் ஆதாரங்களில் போடுவதை தவிக்க வேண்டும்.
மரங்களை நடுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட பகுதியில் நீரைச் சேமிக்கவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் முடியும்.
தண்ணீர் சேமிப்பின் கட்டாயம் மற்றும் தமிழ் இலக்கியம் தண்ணீரின் முக்கியத்துவத்தை விவரிப்பதை உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளியாக வெளியிட்டு இருக்கிறார்