Vivek - Soundarya : நினைவுகளில் என்றும் வாழும் கலைஞர்கள்! சௌந்தர்யா - விவேக் நினைவு தினம் இன்று!
90ஸ் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App1992ம் ஆண்டு கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும் தெலுங்கு திரையுலகில் தலைசிறந்த நடிகை என கொண்டாடப்பட்டார்.
1993ம் ஆண்டு வெளியான 'பொன்னுமணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற 'நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் தெரியுமா...' இன்றும் பிரபலமாக இருக்கும் எவர்கிரீன் பாடல்.
ரஜினியுடன் அருணாச்சலம் மற்றும் படையப்பா, கமலுடன் காதலா காதலா, விஜயகாந்த்துடன் தவசி மற்றும் சொக்கத்தங்கம் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் தமிழ் ரசிகர்களின் ஃபேவரட் நடிகையாக இருந்தார்.
நடிகை, சமூகப்பணி மட்டுமின்றி அரசியல் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
2004ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பணிக்காக பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் பணயம் செய்யும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தார். அவரின் 20ம் ஆண்டு நினைவு தினம் இன்று.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் விவேக்.
சிரிப்புடன் சேர்த்து சிந்தனையை தூண்டும் வகையில் தன்னுடைய காமெடி மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய சீர்திருத்தவாதி.
சின்ன கலைவாணர் என அனைவராலும் போற்றப்படும் இந்த சிறந்த மனிதர் 2021ம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று.
பிறரை புண்படுத்தாமல் சமூக கருத்துக்களை மக்களுக்கு கடத்தி செல்லும் வகையில் இருக்கும் அவரின் காமெடி மூலம் தனக்கென ஒரு தனி ட்ராக்கை உருவாக்கினார்.
நடிப்பை தாண்டி அவருக்கு சமூக நலப்பணிகளில் ஆர்வம் அதிகம். பள்ளி மாணவர்களை இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, மரக்கன்றுகளை விதைப்பது என அவர் இந்த சமூக மீது காட்டிய அக்கறை ஏராளம்.
அவரின் மறைவு ஒட்டுமொத்த திரை துறையினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -