Mark Antony : வந்துட்டார் எஸ்.ஜே சூர்யா..வைப் பண்ண நீங்க ரெடியா? ஓடிடியில் வெளியானது மார்க் ஆண்டனி!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஷால் நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிஞ்ஞானியான சிரஞ்சீவி,(செல்வராகவன்) தொலைபேசி டைம் ட்ராவல் கருவியை கண்டுபிடிக்கிறார். இதன் மூலம் கடந்த காலத்திற்கு போன் பேசி எதிர்காலத்தை மாற்ற முடியும்.
இந்த கருவி, 1975களில் கேங்ஸ்டர்களாக வலம் வரும் ஜாக்கி பாண்டியன் (எஸ்.ஜே.சூர்யா) மற்றும் ஆண்டனி (விஷால்) ஆகிய இருவரையும், ஜாக்கியின் மகனான மதன் பாண்டியனையும், ஆண்டனியின் மகனான மார்க் ஆண்டனியின் வாழ்க்கையையும் எப்படி பல்வேறு ட்விஸ்ட்களுக்கு உள்ளாக்குகிறது என்பதே படத்தின் கதை.
முதல் பாதி கொஞ்சம் சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதி சரவெடியாக இருந்தது.
மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசுலை கடந்தது.
தியேட்டரில் மாஸ் காட்டிய இப்படம் நேற்று (அக்டோபர் 13) அமேசான் ப்ரைமில் வெளியாகியது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -