John Kokken : 'மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா..’ அப்பாவான சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் கொக்கன்!
பிரபல வில்லன் நடிகர் ஜான் கொக்கன் தனது குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகடந்த 2019ஆம் ஆண்டு ஜான் கொக்கனும் பூஜாவும் திருமணம் செய்து கொண்டனர்
நடிகர் ஜான் கொக்கன் - நடிகை பூஜா ராமச்சந்திரன் இருவருக்கும் கடந்த ஏப்.29ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
2021ஆம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் வேம்புலி எனும் கதாபாத்திரத்தில் நடித்து ஜான் கொக்கன் கோலிவுட்டில் பல ரசிகர்கள சம்பாதித்தார்.
பாகுபலியில் தொடங்கி, சார்பட்டா பரம்பரை, துணிவு ஆகிய படங்களில் வில்லனாக நடித்து கவனமீர்த்தவர் மலையாள நடிகர் ஜான் கொக்கன்.
இந்நிலையில் முதன்முறையாக தன் குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ஜான். 'மற்ற எல்லா கதைகளிலும் நான் வில்லன்தான் ஆனால் என் மகனின் வாழ்க்கையில் ஹீரோவாக இருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது’என்ற இவரது கேப்ஷன், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -