Pichaikkaran 2 : மூளை அறுவை சிகிச்சை பற்றிய படமா? இதுதான் பிச்சைக்காரன் 2 ஆம் பாகத்தின் கதையா?
விஜய் ஆண்டனியின் மாறுபட்ட நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் தமிழ்நாட்டை தாண்டி, தெலுங்கு சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
விஜய் ஆண்டனியின் இயக்கத்தில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது.
படப்பிடிப்பில் விபத்து, ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு என பல இக்கட்டான சூழ்நிலைகளை தாண்டியும், இப்படத்தை பற்றி விஜய் ஆண்டனி பாசிட்டிவாகவே பேசி வருகிறார்
மே 19ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கான ப்ரமோஷனில் படக்குழு பிசியாக உள்ளது. இப்படத்தின் பாடல்களும் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
விமர்சகர்களையும் செய்தியாளர்களையும் சந்தித்த பிச்சைக்காரன் 2 குழு, படத்தில் இடம்பெறும் முக்கியமான காட்சியை பற்றி கூறியுள்ளது
மூளை மாற்று அறுவை சிகிச்சை நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமில்லாத ஒன்று. இருப்பினும், கற்பனை கலந்த கதை அம்சத்தை கொண்ட பிச்சைக்காரன் படத்தில், கோடீஸ்வரன் ஒருவனுக்கு தெருக்களில் வசிக்கும் பிச்சைக்காரர் ஒருவரின் மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதனால் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதையாக அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.