Vikram 62 : விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன்.. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது!
நடிகர் விக்ரமின் 62வது படத்தை இயக்குநர் எஸ் யு. அருண்குமார் இயக்குவதாக அறிவிப்பு வெளியாகிய நிலையில் சில நாட்களுக்கு முன்பாக டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிக்ரமின் 62வது படத்திற்கு வீர தீரசூரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தங்கலான் க்ளிம்ப்ஸ் வீடியோவை கண்ட ரசிகர்கள், இந்த படத்தின் டீசரையும் பார்த்து மகிழ்ந்தனர்.
தங்கலான் படத்திற்கு இசை அமைத்த, ஜி.வி பிரகாஷ் குமார்தான் வீர தீர சூரன் படத்திற்கும் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள வீர தீர சூரன் படம், இரண்டு பாகமாக வெளியாக உள்ளதாகவும் படத்தின் இரண்டாம் பாகம் முதலிலும் , முதல் பாகம் இரண்டாவதாகவும் வெளியாக போவதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் படப்பிடிப்பு ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு தொடங்கிய பின் படத்தின் அப்டேட்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -