Thangalaan Release Date : மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட தங்கலான் ரிலீஸ் தேதி... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் திரைப்படம் 'தங்கலான்'.
மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
கேஜிஎஃப்பில் வாழும் பூர்வகுடி தமிழர்களின் வாழ்வியலை மையமாக வைத்து உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது
'தங்கலான்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனுஷின் 'கேப்டன் மில்லர்' மற்றும் சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படமும் வெளியானதால் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.
ஜனவரி 26ம் தேதி சில காரணங்களால் 'தங்கலான்' படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
தற்போது பொங்கலை முன்னிட்டு 'தங்கலான்' படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு. இப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாக உள்ளது என்ற தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.