Dhruva Natchathiram : சென்சார் சான்றிதழை வாங்கிய துருவ நட்சத்திரம்..அடுத்து ரிலீஸ்தான்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன், ஸ்பை திரில்லர் கதை ஒன்றை படமாக்க திட்டமிட்டார். இப்படத்தை தான் இணைந்து தயாரிப்பதாகவும் 2013 ஆம் ஆண்டில் தெரிவித்தார்
நடிகர் சூர்யாவுடனான பேச்சு வார்த்தை நடந்தது, படக்கதையை பல நாட்களாக கெளதம் மேனன் மாற்றி வந்ததால், சூர்யா அப்படத்தில் நடிக்கவில்லை என்று அறிவித்தார்.
இப்படத்தில் நடிக்க திரிஷா, அசின், சமீரா ரெட்டி, அமலா பால், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலருடன் பேச்சுவார்த்தை நடந்தது.
என்னை அறிந்தால் ரிலீஸிற்கு பின்னர், துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பின் பொருளாதார நெருக்கடியால் பல சிக்கல்கள் உருவானது.
2017ல் தொடங்கப்பட்ட ஷூட், 2023ல் முடிந்தது. அதற்கான டப்பிங் பணிகளும் முன்னும் பின்னும் நடத்தப்பட்டது.சில நாட்களுக்கு முன்னதாக படத்தின் டீசரும், 2 பாடல்களும் வெளியானது. முன்னதாக இதற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவிருந்தார். பின், ஹாரிஸ் ஜெயரஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்தாண்டின் இறுவிக்ரம், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் இந்தாண்டின் இறுதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது U/A சான்றிதழை பெற்ற இப்படத்தின் நீளம் 2 மணிநேரம் 38 நிமிடங்கள் என்பது குறிப்பிடதக்கது.திக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள துருவ நட்சத்திரம் படத்தின் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. U/A சான்றிதழை பெற்ற இப்படத்தின் நீளம் 2 மணிநேரம் 38 நிமிடங்கள் ஆகும்.