Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
கடந்த ஆண்டு உடல்நல பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய முதலாம் ஆண்டு நினைவு தினம் சில தினங்களுக்கு முன் மிகவும் பிரமாண்டமான முறையில் நடந்து முடிந்தது. விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும் தேமுதிக தொண்டர்கள் இதனை குருபூஜை என்கிற பெயரில் அனுசரித்தனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு முன்னர் தன்னுடைய கட்சி நிர்வாகிகள் வந்தால் தங்குவதற்கு வசதியாக பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டி வந்தார். ஆனால், அந்த வீடு கட்டி முடிப்பதற்குள் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் மகன்கள் மற்றும் மனைவியுடன் வசித்து வாழ்ந்து வந்த விஜயகாந்த் போரூர் பகுதியில் உள்ள காட்டுப்பாக்கத்தில் தான் இந்த பிரமாண்ட வீட்டை கட்டி இருந்தார்.
இந்த வீட்டின் பணிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது. அந்த வீடு நினறிவு பணிகளை எட்டியபோது விஜயகாந்த் மறைவால் அந்த பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. பின்னர் விஜயகாந்த் மறைந்து 6 மாதங்கள் ஆனபின்னரே மீண்டும் இந்த பணிகள் சூடுபிடிக்க துவங்கியது. தற்போது அணைத்து பணிகளும் நிறைவடைந்து, வீடு கிரஹப்ரவேசத்திற்கு தயாராக உள்ளது.
விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய இந்த வீடு சுமார் 20 ஆயிரம் சதுர அடியிலான பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வந்தால் நின்று பேசுவதற்கும், தங்குவதற்கும் வசதியாக இருக்கும் வகையில் கட்டப்பட்டது. இப்போது அந்த வீடு கட்டி முடிக்கப்பட்ட நிலையில் கிரகப்பிரவேசத்திற்கு தயாராகி உள்ளது. சமீபத்தில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்ட நிலையில், இன்னும் சில மாதத்தின் இதன் கிரஹப்பிரவேசம் நடக்கும் என தேமுதிக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -