Vadivelu: கொடுக்கும் சம்பள பணத்தை பிடிங்கிக் கொள்வார்; வடிவேலு பற்றி கொட்டாச்சி கூறிய ஷாக் தகவல்!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் வடிவேலு. கவுண்டமணி, செந்திலுக்கு அடுத்த வரிசையில் இடம் பெற்றிருப்பவர் வடிவேலு. எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். அடி வாங்கி அடி வாங்கியே ரசிகர்களை சிரிக்க வைக்கும் திறமை கொண்டவர் தான் வடிவேலு. இது போன்று எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார். ஹீரோவாகவும் சில படங்களிலும் நடித்துள்ளார்.
என்னதான் சினிமாவில் கொடி கட்டி பறந்தாலும், வடிவேலு மீது சக நடிகர்கள் அடுத்தடுத்து குற்றம் சாட்டி வருவது வாடிக்கையாக வருகிறது. வடிவேலு குறித்து அவருடன் நடித்த கொட்டாச்சி இப்போது கூறியுள்ள தகவல் தான் பலரையும் வியப்படைய வைத்துள்ளது.
அதாவது வடிவேலு உடன் நடிக்கும் காமெடி நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை கூட அவர் பிடிங்கிக் கொள்வார் என்று கூறியுள்ளார் கொட்டாச்சி.
சக நடிகர்களுக்கு தயாரிப்பாளர் தான் மொத்தமாக சம்பளம் தருவார். அதனை, நானே கொடுத்து கொள்கிறேன் என்று வடிவேலு பிடிங்கிக் கொள்வாராம். அது மட்டுமின்றி தயாரிப்பாளர் அதிகமாக தான் சம்பளம் கொடுப்பார். ஆனால், வடிவேலு இவர்களுக்கு ஏன் இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும், தயாரிப்பாளர் கொடுக்கும் சம்பளத்தில் பாதி தான் கொடுப்பார்.
ஆனால், வடிவேலுவிடம் சற்று வேறுபட்டவர் தான் விவேக். அவர் தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கு டெய்லி பேட்டா எவ்வளவோ அதனை அப்படியே கொடுக்க சொல்வார் என்று பேசியிருக்கிறார்.
கொட்டாச்சி மட்டுமில்ல வடிவேலு பற்றி அவருடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். தனக்கு கீழ் பணியாற்றியவர்களை ஒருபோதும் வடிவேலு வளர விட்டதே இல்லை என்பது... பலரின் குற்றச்சாட்டு.