Vijay Latest Tweet : ஷாருக்கானுக்கும் அட்லீக்கும் வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்!
கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்தும் இயக்குநர் அட்லீ, ராஜா ராணி ,தெறி ,மெர்சல், பிகில் ஆகிய மாஸ் கமர்சியல் படங்களை இயக்கி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறார்
அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய பிகில் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அட்லீக்கு பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது.
பாலிவுட் ரசிகர்கள் காணாத திரைக்கதையை ஜவான் மூலம் அர்ப்பணித்தார் அட்லீ.
ஜவான் திரைப்படம் உலக அளவில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், ஷாருக்கானின் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்து இயக்குநர் அட்லீக்கும் ஷாருக்கானுக்கும் ஜவான் திரைப்பட குழுவினருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை எக்ஸ் தளம் மூலம் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.
பின், இயக்குநர் அட்லீ நன்றி தெரிவித்து ரீ-ட்வீட் செய்துள்ளார்.