Vijay in USA : அமெரிக்காவில் நடிகர் விஜய்.. எங்கு பார்த்தாலும் ட்ரெண்டாகும் ஒரே புகைப்படம் இதுதான்!
நடிகர் விஜய்யின் லியோ பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appலியோ படக்குழுவினர் படப்பிடிப்பிற்கு பிந்தைய தயாரிப்பு பணிகளில் தீவரமாக உள்ளனர்.
லியோ வெளியாகும் முன்னரே, தளபதி 68 குறித்த அப்டேட் வெளியானது. விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது, இணையத்தில் விஜய்யின் புகைப்படம் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. தளபதி 68 படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக விஜய், வெங்கட் பிரபு, ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்க சென்றுள்ளதாக தகவல் பரவிவருகிறது. இப்புகைப்படம் அமெரிக்காவில் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பு வந்தது.
இதுவரை ட்ரெண்டிங்கில் இருந்த நடிகர் விஜய்க்கு டஃப் கொடுக்கும் வகையில் ஜேசன் சஞ்சயும் ட்ரெண்டாகி வருகிறார். புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்றும் தி லயன் கிங் படத்தில் வரும் காட்சிகளை வைத்து ஒப்பிட்டு சில மீம்ஸ்களும் உலா வந்து கொண்டிருப்பது குறிப்பிடதக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -