✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Vijay TV Pugazh : முதலாம் ஆண்டு திருமண நாளன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புகழ்!

சுபா துரை   |  01 Sep 2023 02:34 PM (IST)
1

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் புகழ். அவரின் ஹேர்ஸ்டைல் மற்றும் காமெடியான பேச்சு ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. தொடர்ந்து சினிமாவிலும் அவருக்கான வாய்ப்பு வர ஆரம்பித்தது.

2

அந்த வகையில் அஜித் நடித்த வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், சசிகுமார் நடித்த அயோத்தி, அருண் விஜய் நடித்த யானை, சிவகார்த்திகேயனின் டான், கௌதம் கார்த்தி நடித்த 1947 உள்ளிட்ட படங்களில் புகழ் நடித்துள்ளார்.

3

இதில் அயோத்தி, 1947 ஆகிய படங்களில் புகழின் நடிப்பு மிகுந்த பாராட்டைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து எம்.ஜே.இளன் இயக்கும் ‘துடிக்கிறது மீசை’ படத்தில் ஹீரோவாக புகழ் அறிமுகமாகிறார். காதல் தோல்வியை மையப்படுத்திய இந்த படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். இதனை தவிர்த்து ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற புதிய படத்தில் புகழ் ஹீரோவாக நடித்து வருகிறார்.

4

இப்படியான நிலையில், திண்டிவனம் அருகேயுள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி புகழுக்கு திருமணம் நடைபெற்றது. தனது நீண்ட நாள் காதலியான பென்ஸியாவை எளிய முறையில் திருமணம் செய்து கொண்டதை கண்டு ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். இவர்களது திருமணத்திற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

5

இந்நிலையில் இன்று தனது முதலாம் திருமண நாளை கொண்டாடும் புகழ், தன் கர்ப்பமான மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

6

தற்போது புகழ் - பென்சி தம்பதிக்கு திரை துறையினரும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Vijay TV Pugazh : முதலாம் ஆண்டு திருமண நாளன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த புகழ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.