Vijay Re-release Movies : ரசிகர்களுக்கு விஜய் கொடுக்கும் ட்ரிபிள் பர்த்டே ட்ரீட் என்னென்ன தெரியுமா?
விஜய் - திரிஷா நடிப்பில் வெளியான 'கில்லி' திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வசூலில் பட்டையை கிளப்பியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதை தொடர்ந்து விஜயின் நடிப்பில் பிளாக் ஹிட் படமான துப்பாக்கி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியானது.
விஜய் - காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
வரும் ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை குஷி படுத்தும் வகையில் ஜூன் 21ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
கில்லி படத்தை போலவே துப்பாக்கி படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர விஜயின் நடிப்பில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த 'பகவதி' மற்றும் 'போக்கிரி' படங்களையும் ஜூன் 21ம் தேதி ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -