GOAT First Single : ஒரு நாள் முடிவதற்குள் 10 மில்லியன் வியூஸ் கடந்த விஜயின் விசில் போடு பாடல்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் The Greatest Of All Time
பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, அஜ்மல், ஜெயராம், மோகன், சினேகா உள்ளிட்ட ஏராளமானோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'விசில் போடு' பாடலை வெளியிட்டனர்.
மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுத விஜய், வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பிரேம்ஜி அமரன் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.
நேற்று மாலை வெளியான இந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் 24 மணிநேரத்திற்கு முன்னரே 10 மில்லியன் வியூஸ் கடந்த ட்ரெண்டிங் லிஸ்டில் முதலிடத்தில் உள்ளது.
மாஸான ஒரு பாடலை தமிழ் புத்தாண்டு தினத்தந்து வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளனர் GOAT படக்குழு.