The Goat Trailer : தி கோட் ட்ரெய்லரில் இடம்பெற்ற கில்லி படத்தின் சீன்.. நீங்க பாத்தீங்களா?
வெங்கட் பிரபு - விஜய் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கோட் (The Greatest Of All Time). விஜய் படம் என்பதால் படம் குறித்த அறிவிப்பு வந்ததும் ஆரவாரம் தொடங்கியது.
படத்தின் பூஜை முடிந்ததும் விஜய்யுடன் பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல், மைக் மோகன், சினேகா, மீனாட்சி செளத்ரி,லைலா, பிரேம்ஜி, வைபவ், ஜெயராம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என்பது தெரிய வந்தது.
கதைக்கு டீ ஏஜிங் டெக்னாலஜி தேவைப்பட்டதால் படப்பிடிப்புக்கு முந்தைய தயாரிப்பு பணிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் நடைப்பெற்றது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பின்னர், விசில் போடு, சின்ன சின்ன கண்கள், ஸ்பார்க் ஆகிய மூன்று பாடல்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகி பல விமர்சனங்களுக்கு உள்ளானது.
இந்நிலையில் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் ட்ரெய்லர் நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின்னர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகியது.
இந்த ட்ரெய்லரை பார்க்கும் போது, தி கோட் பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது என்பது தெரிகிறது.