Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Leo Trailer Review : லியோ - பார்த்தி.. டபுள் ஆக்ஷனா? அல்டர் ஈகோவா? லியோ ட்ரெய்லரின் குட்டி விமர்சனம் இங்கே!
சீரியல் கில்லர் ஒருவன், கண்ணில் படும் நபர்களை எல்லாம் கொள்கிறான். நிறைய நபர்கள் செத்து மடிந்தாலும், தொடர்ந்து கொலை செய்து வருகிறான். அப்போது போலீஸ் ஆஃபிஸ் ஒருவர், அந்த சீரியல் கில்லரை கொல்ல முயற்சிக்கிறார். ஆனால், சீரியல் கில்லர், காவல் அதிகாரியை முந்திக்கொண்டு, அவரின் துப்பாக்கியை தன் வசம் ஆக்கி கொள்கிறான் என இண்ட்ரோ கொடுக்கப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஊரை ஏமாற்றி வரும் இவனை முன் பகை தேடி வருகிறது. ஆனால், இதில் ஒரு ட்விஸ்ட், அவர்கள் தேடி வருவது அந்த சீரியல் கில்லரை அல்ல, அவனை போல் இருக்கும் மற்றொரு நபரை. தன் குடும்பத்துடன் வாழும் பார்த்தியை, லியோ என நம்பி, ஆண்டனி மற்றும் ஹெரால்ட் தாஸ் பழிவாங்குகின்றனர்.
பொறுமையாக இருந்த பார்த்தி, அவன் குடும்பத்தை துன்புறுத்தியவர்களை திருப்பி அடிக்க ஆரம்பிக்கிறான் என்பதை விவரிக்கிறது இந்த லியோ ட்ரெய்லர்.
அமைதியாக இருந்து போரினை தவிர்க்க வேண்டும், அமைதியாக இருந்து, தப்பிக்க வேண்டும், அமைதியாக இருந்து, போருக்கு ஆயத்தம் ஆக வேண்டும், அமைதியாக இருந்து, சாத்தானை எதிர்கொள்ள வேண்டும் என்ற வாசகங்கள் போஸ்டரில் இடம்பெற்று இருந்தது. இதை காட்சிப்படுத்தும் வகையில், இந்த ட்ரெய்லர் அமைந்துள்ளது.
இந்த ட்ரெய்லரை பார்த்த பலரும், இது டபுள் ஆக்ஷன் படமாக இருக்கும் என நம்புகின்றனர். ஆனால், முதன்முதலாக வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிளில் அல்டர் ஈகோ என்ற வார்த்தை இடம்பெற்று இருந்தது. உருவத்தை வைத்து தேடி வரும் பகைகளின் தொல்லைகளை தாங்கமுடியாமல் அல்லல் படும் பார்த்தியின் உள்மனதில் இருந்து லியோ எனும் அல்டர் ஈகோ வெளியாகிறது என்பதே லோக்கியின் டச்சாக இருக்கலாம். அத்துடன், வழக்கமாக லோக்கியின் படங்களில் போதை பொருட்கள் பற்றிய காட்சிகள் இடம்பெற்று இருக்கும். ஆனால், இந்த ட்ரெய்லரில் இவை இடம்பெறவில்லை. இது எல்.சி.யூ உடன் இணையுமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். போதும் போதும் என்ற அளவிற்கு பெரும் நட்சத்திர பட்டாளத்தை இறக்கினார்கள். ஆனால், இந்த ட்ரெய்லரில் ஒரு சில நபர்களே காண்பிக்கப்பட்டுள்ளனர்.
U/A சான்றிதழை பெற்ற இப்படத்தில் கெட்ட வார்த்தைகள் இடம்பெறாது. ஆனால், இந்த ட்ரெய்லரில் ஒரு கெட்ட வார்த்தை வருகிறது. லோக்கியின் படங்களில் இவை இடம்பெறாமல் இருந்தால்தான் அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். இது விஜய்யின் படமாக இல்லாமல் முழுக்க முழுக்க லோக்கியின் படமாகவே இருக்கும் என்பது தெரிகிறது. விக்ரம் படத்தில் இடம்பெற்ற வரிசையான தீம் ட்ராக்குகள் போல் லியோவின் பின்னணி இசை திரையரங்களில் சில்லறையை சிதறவிடும் என்பது உறுதி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -