20 Years Of Ghilli : வேலுவும் தனலட்சுமியும் மீட் பண்ணி 20 வருஷம் ஆயிடுச்சு!
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்களை விரல் விட்டு எண்ணி விட முடியும். அந்த வகையில், கோலிவுட்டின் மாஸ்டர் பீஸான கில்லியும் இந்த பட்டியலில் முக்கியமான இடத்தை பிடிக்கிறது.
ஆல் டைம் ஃபேவரட் வேலு - தனலட்சுமி ஜோடியை தாண்டி முத்துபாண்டி, போலீஸ்கார அப்பா சிவசுப்பிரமணியம், அம்மா ஜானகி, தங்கை புவனா, நண்பர்கள் ஓட்டேரி நரி, நாராயணா, பிரசாத் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இன்றளவும் மனதில் பதிந்து இருக்கத்தான் செய்கிறது.
காதல் கொடுக்கும் நம்பிக்கை, அப்பா - மகனுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், மூர்க்கத்தனமான வில்லனின் மோசமான குணம், அண்ணா - தங்கை பாசம், அனைத்தையும் தாண்டிய நட்பு, சண்டை காட்சிகள், கபடி விளையாட்டு என ஒவ்வொரு விஷயமும் சூப்பராகவே இருக்கும்.
கில்லி ப்ளேலிஸ்டில் பாடலுக்கு பஞ்சமே இல்லை. ஹீரோவின் என்ட்ரிக்கு கபடி கபடி, தனது கணவன் எப்படி இருப்பான் எனும் பெண்களின் தேடலை பிரதிபலிக்கும் ஷா லா லா, நம்மை நாமே மோடிவேட் செய்துகொள்ள அர்ஜுனரு வில்லு பாடல், குத்தாட்டம் போட அப்படி போடு பாடல், கேட்க துள்ளலாக இருக்கும் கில்லி, கொக்கர கொக்கரக்கோ பாடல்கள் என மாஸ் காட்டியிருப்பார் வித்யாசாகர்
வேலு அன்று காலை மட்டும் ஜாக்கிங் போகாமல் இருந்தால், தனலட்சுமியை பார்த்து இருக்க மாட்டான். முத்து பாண்டியை பகைத்து இருக்க மாட்டான். சென்னையில் விறுவிறுப்பான விஷயங்கள் நடந்து இருக்காது. நமக்கும் கில்லி என்ற படம் கிடைத்திருக்காது...
2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளிவந்த ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் படமான கில்லி இன்றுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனையொட்டி, வரும் ஏப்ரல் 20 படம் ரீ ரிலீஸாகவுள்ளது.