விஜய் படத்தில் நடித்தும்... ஒரே ஒரு மார்ஃபிங் வீடியோவால் ஒட்டுமொத்த கேரியரை தொலைத்த நடிகையா இது?
துபாயில் பிறந்து வளர்ந்து, பாலிவுட்டில் வெளியான Mahek என்ற படம் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை அனுயா. இந்தப் படத்திற்கு பிறகு தமிழ் படத்தில் அறிமுகமானார். இவர் தமிழில் நடித்த முதல் படம் தான் சிவா மனசுல சக்தி. முழுக்க காதலை மையப்படுத்திய இந்தப் படத்தில் அறிமுகமானதோடு, ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
இந்தப் படம் கொடுத்த வரவேற்புக்கு பிறகு தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது. மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம் (சிறப்பு தோற்றம்), நண்பன், நான் ஆகிய படங்களில் நடித்தார். தமிழில் வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத அனுயா, அடுத்தடுத்து தோல்விகளை கொடுத்தார்.
இதற்கு கதை தேர்வு தான் காரணமாக சொல்லப்பட்டது. அவர் மட்டும் கதையில் கவனம் செலுத்தி நடித்திருந்தால் தமிழ் சினிமாவில், முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்திருப்பார் என்பது சினிமா விமர்சகர்களின் கருத்து.
துணிச்சலான நடிகையான அனுயா, ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் இலியானாவிற்கு அக்கா ரோலில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் அவருக்கு விஜய் பிரசவம் பார்ப்பது போன்று ஒரு காட்சி இருக்கும். இந்தக் காட்சியில் நடித்து தளபதி விஜய் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்றார்.
சினிமா வாய்ப்புகள் இல்லாத போது சரி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போயிட்டு வரலாம். அதன் பிறகு சினிமா வாய்ப்பு குவியும் என்ற கற்பனையோடு பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஆனால், அங்கு அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஒரு வாரத்திலேயே திரும்ப வந்துவிட்டார். அப்போது தான் சுசி லீக்ஸ் சர்ச்சை கிளம்பியது. அதில், அனுயா தொடர்பான மார்ஃபிங் வீடியோ வெளியானது.
இது அவரது கேரியரில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நிகழ்ச்சியின் போது இது போன்ற பொய்யான வீடியோவால் தான் தனது பட வாய்ப்புகள் பறிபோனது என்று கூறினார்.
அப்போது என்னுடைய பெற்றோர்கள் தான் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்றார். என்னதான் சினிமா வாய்ப்புகள் இல்லையென்றாலும் கூட அனுயா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இவரது குழந்தை பருவ புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.