எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாமல் சொக்கத்தங்கமாக வாழும் 6 மாஸ் ஹீரோக்கள்!

பொதுவாக சினிமா என்றாலே சிகரெட் புடிப்பது, சரக்கு அடிப்பது என்று எல்லா கெட்ட பழக்கத்துடன் நடிகர், நடிகைகள் இருப்பார்கள் என்ற ஒரு பிம்பம் உள்ளது. அதற்கு திரையில் காட்டப்படும் காட்சிகளே சாட்சி. திரையில் காட்டுவது எல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டிருப்பவர்களும் உண்டு. ஆன்னால் சினிமாவில் வில்லனாக இருக்கும் நடிகர்கள் எல்லோரும் நிஜத்தில் அப்படி இருப்பதில்லை. அதற்கு எம்.என். நம்பியார் மட்டுமின்றி ஆனந்தராஜூம் மிகப்பெரிய உதாரணம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
எம்ஜிஆர் காலத்தில் ஆரம்பித்து இன்று சிவகார்த்திகேயன் வரையில் எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லாமல் வாழ்ந்து வரும் சினிமா பிரபலங்கள் சிலர் உள்ளனர். அப்படி எந்த கேட்ட பழக்கமும் இல்லாமல் வாழும் நடிகர்கள் பற்றிய பார்ப்போம்

இந்த லிஸ்டில் பெற்றிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சினிமா மீது இவர் கொண்ட காதல் அவரை இன்று ஒரு அமரனாக முன்னிறுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவில் அடுத்த தளபதி என்றெல்லாம் பெயர் சூட்டினார்கள். ஆனால், அவர் தன்னடக்கமாக எப்போதும் ஒரே ஒரு தளபதி தான் சொல்லிவிட்டார். அப்படிப்பட்ட நடிகருக்கு எந்தவித கெட்ட பழக்கமும் கிடையாது.
அதே போல் சினிமாவில் ஹீரோயினை தொடாமல் நடித்து தனக்கென்று தனி அடையாளம், முத்திரை பதித்தவர் டி ராஜேந்தர். அவருக்கும் எந்த கெட்ட பழக்கும் இல்லை.
அடுத்து தமிழ் சினிமாவின் முக்கியமான நட்சத்திரம் நடிகர் சிவகுமார். இப்போது அவருக்கு 83 வயதாகிறது என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். அந்தளவிற்கு தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். மேலும், அவர் தினமும் யோகா செய்கிறார். குறிப்பாக இந்த வயதிலும் அவர் வலிமையாக இருக்க காரணம் அவருக்கு எந்த கெட்டப்பழக்கமும் இல்லை என்பதே.
இவரை போன்றுதான் அவரது 2 மகன்களுக்கும் எந்த கெட்ட பழக்கமும் இல்லை. சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சினிமாவில் பலவிதமான காட்சிகளில் நடித்திருந்தாலும் அதெல்லாம் சினிமாவிற்காக காட்டப்படுவதே தவிர நிஜத்தில் அப்படியெல்லாம் கிடையாது.
இந்த லிஸ்டில் இடம்பிடித்துள்ள வில்லன் நடிகர் தான் ஆனந்தராஜ். கிட்டத்தட்ட 35 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர், சினிமாவில் சிகரெட் குடிப்பது, சரக்கு அடிப்பது போல் சர்ச்சை காட்சியில் நடித்தாலும், நிஜத்தில் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இன்றி, எந்த ஒரு சர்ச்சியிலும் சிக்காமல் வாழ்ந்து வருகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -