Super Singer Pragathi: இந்த பிரபலம் தான் சூப்பர் சிங்கர் பிரகதியின் காதலரா.? வைரலாகும் ரொமான்டிக் புகைப்படம்!
விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.
இதில், ஜூனியர் மற்றும் சீனியர் என்று ஒவ்வொரு சீசன்களிலும் தனித்தனியாக ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 சீசனில், அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டவர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பிரகதி குருபிரசாத்.
தனது மாய குரலால் மக்களை மயக்கிய பிரகதி, 2-ஆவது இடத்தை பிடித்தார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னர் ஏராளமான படங்களில் பிரகதி பின்னணி பாடியுள்ளார். அதே போல் பல ஆங்கில ஆல்பம் பாடல்களும் பாடி உள்ளார்.
இவருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ள நிலையில், சோசியல் மீடியாவிலும் இவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் பிரகதி குருபிரசாத் முதல் முறையாக தனது காதலர் யார் என்பதை இந்த உலகிற்கு புகைப்படத்தை வெளியிட்டு காட்டியுள்ளார்.
Silhouette (நிழல் வடிவம்) முறையில் தனது காதலர் யார் என்பதை காட்டியுள்ளார். அந்த நிழல் உருவத்தை மட்டும் வைத்து இவர் சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் ஆன சாம் விஷால் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
சாம் விஷால் ஏராளமான இண்டிபெண்டெண்ட் ஆல்பம் பாடல்கள் மற்றும் பல படலங்களில் பின்னணி பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.