Vijay IT Wing : விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி விங் ஆலோசனை கூட்டத்தின் தேதி அறிவிப்பு!
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வரும் விஜய்க்கு எக்கசக்கமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வரும் விஜய் ரசிகர்கள், சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தான் நடிக்கும் படங்களில் அரசியல் பேசுவதும், கிடைக்கும் மேடைகளில் குட்டிக்கதை சொல்வதும், அரசியல் ரீதியான செயல்களை செய்தும் அரசியல் மீது இருக்கும் ஆர்வத்தை சொல்லாமல் சொல்லிக்காட்டுகிறார் விஜய் என ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளில் அதிக மதிப்பெண் எடுத்து முதல் மூன்று இடத்தை பெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்று இரவு 11 மணிவரை மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
பின்னர் விஜய் பெயரில் “விஜய் பயிலகம்” என்று குழந்தைகள் படிப்பிற்காக பயிலகம் ஒன்றை உருவாக்கினார்.
தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி விங் ஆலோசனை கூட்டம் வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் செய்யும் ஒவ்வொரு நகர்வும், அரசியல் பயணத்திற்கான அடித்தளமாக அமையும்.