Vijay Devarakonda : ‘காதல் திருமணம்தான் செய்து கொள்வேன்...’ ஆசையை அள்ளிக்கொட்டிய விஜய் தேவரகொண்டா!
தென்னிந்திய பெண்களின் மனதை கவர்ந்த சாக்லேட் பாய்களில் ஒருவர் விஜய தேவர்கொண்டா
இவர் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் பிரபலமாகி நோட்டா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் தற்போது ரொமாண்டிக் படமான குஷியில் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ளார்.
சமீபத்தில் குஷி படத்திற்கு நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து நடனம் ஆடியது பேசும் பொருளாக மாறியது.
தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னைக்கு வந்த இவர் பேட்டி அளித்த போது, “நான் காதல் திருமணம்தான் செய்துகொள்வேன். மனைவியாக வரப்போகும் பெண்ணிடம் பழகி குணநலன்களை அறிந்து கொள்வது மிக முக்கியம்” என பேசினார்.
“பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது. நான் பெண்களை மதிக்கிறேன். என்னை பெண்ணியவாதி என்று கேலி செய்வதால் வருத்தம் இல்லை”என்றும் பேசினார் நடிகர் விஜய் தேவரகொண்டா.