PAK Vs AFG : ஆரம்பத்தில் அருமையாக தொடங்கி ஆழ்ந்த துக்கத்தில் முடிந்த ஆப்கானிஸ்தானின் ஆட்டம்!
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடருக்காக இரு அணிகளும் இலங்கை சென்றுள்ளது. இதில் முதல் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக கூறியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.
வந்தவர்கள் அனைவரும் வந்த வேகத்திலேயே திரும்ப 47.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 201 ரன்கள் மட்டுமே பாகிஸ்தானால் எடுக்க முடிந்தது. ஆப்கானிஸ்தான் அணி பாக்கிஸ்தான் அணியை ஆல் ஆவுட் ஆக்கியது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடதக்கது.
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பம் முதலே பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது.
பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் வீரர்கள் 5 பேர் டக் அவுட் ஆனார்கள். ரஹ்மானுல்லா குர்பாஸ்(18) மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய்(16) ஆகியோர் மட்டுமே இரட்டை ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை ரன்களிலேயே ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினர்.
19.2 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி வெறும் 59 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணி வீரர் ஹாரிஸ் ரவூப் தலா 5 விக்கெட்டை வீழ்த்தியதற்காக ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -