Vijay Box Office Hits : பாக்ஸ் ஆஃபீஸில் ஹிட் அடித்த விஜய் படங்கள்!
2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளிவந்த கில்லி. 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 50 கோடி ரூபாயை வசூலித்து விஜய்க்கு முதல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்தது. கில்லி ஒக்கடு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிஜய், அசின், நாசர், நெப்போலியன், பிரகாஷ் ராஜ், வடிவேலு ஆகியோர் நடித்திருந்த போக்கிரி படத்தை பிரபு தேவா இயக்கி இருந்தார். 12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட போக்கிரி 70 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது.
2012 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் துப்பாக்கி. படத்தில் தீவிரவாதியை அளிக்கும் சிறப்பு ராணுவ வீரராக விஜய் நடித்து இருந்தார். 62 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட துப்பாக்கி படம் 100 கோடி ரூபாயை தாண்டி வசூலித்து சாதனை படைத்து. விஜய்க்கு முதலில் 100 கோடி ரூபாயை வசூலித்து கொடுத்த பெருமையும் துப்பாக்கி படத்திற்கு உண்டு.
லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பின் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த படம் கத்தி. படத்தில் கதிரேசன், ஜீவானந்தம் என்ற இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 125 கோடி ரூபாய் வரை வசூலித்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்தது.
அட்லீ இயக்கத்தில் தெறி படத்தில் விஜய் போலீசாக நடித்து இருந்தார். இந்த படம் 75 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் 150 கோடி ரூபாய் வரை வசூலித்தது.
2017 ஆம் ஆண்டு அட்லீயுடன் விஜய் இரண்டாவது முறையாக இணைந்த படம் மெர்சல். படத்தில் வெற்றிமாறன், வெற்றி, மாறன் என மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், 12 நாட்களில் ஒட்டு மொத்தமாக 200 கோடி வரை வசூலித்தது. அதன் பின்னர் வந்த அனைத்து படங்களும் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -