Vijay Birthday Surprise: ‘கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா’ லியோ - தளபதி 68 படக்குழு கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்படத்தில் நடிகை திரிஷா, சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலி கான் என திரை பட்டாளமே களமிறங்கியுள்ளது.
பொதுவாக லோகேஷ் கனகராஜ் படத்தில் பாடல்களுக்குப் பெரிதாக முக்கிய துவம் இருக்காது. மாஸ்டர் படத்தில்‘வாத்தி கம்மிங்’பாடலும், விக்ரம் படத்தில் ‘பத்தல பத்தல’போன்ற பாடல்கள் விதிவிலக்காக அமைந்தது.
தற்போது சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் லியோ படத்திற்காக 1500 நடனக் கலைஞர்கள் கொண்டு விஜய் நடனமாடும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது எனத் தகவல் வெளியாகி உள்ளது
இதைத்தொடர்ந்து விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 அன்று லியோ படக்குழு கமல்ஹாசனின் பின்னணி குரலில் உருவான க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிடத் திட்டமிட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஜுன் 22 ஆம் தேதியன்று, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தின் டைட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -