Adipurush Free Ticket : இலவசம்..இலவசம்..ஆதிபுருஷ் படத்துக்கு 10,000 டிக்கெட் இலவசம் ! எப்படி வாங்கலாம் ?
இயக்குநர் ஓம் ரவுத் இயக்கத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான் ஆகியோர் நடித்துள்ள படம் “ஆதிபுருஷ்”.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த படம் தியேட்டரில் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் படக்குழுவினர் தீவிர ப்ரோமோஷனில் களமிறங்கியுள்ளனர்
ட்ரெய்லர் வெளியிட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் ஓம் ரவுத், ஆதிபுருஷ் படம் திரையிடப்படும் ஒவ்வொரு திரையரங்கிலும் ஹனுமனுக்காக ஒரு சீட்டை காலியாக வைக்க வேண்டும் என தயாரிப்பாளரிடமும், விநியோகதஸ்களிடமும் கோரிக்கை விடுத்தார்.
தற்போது இந்த படத்திற்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் இலவசமாக வழங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
அதைப்பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்ககுநர் ஓம் ரவுத் ‘ஸ்ரீராமர் மீதுள்ள எனது பக்தியின் காரணமாக, அரசு பள்ளிகள், அனாதை இல்லங்களுக்கு 10,000 டிக்கெட்டுகளை வழங்க முடிவு செய்துள்ளேன்’ என அறிவித்துள்ளார்.
இந்த இலவச டிக்கட்கள் தெலுங்கானாவில் உள்ள அரசு பள்ளிகள், அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு மட்டும் தான் கொடுக்கப்பட உள்ளது. இதனை தமிழ்நாட்டில் இருக்கும் ரசிகர்கள் பெற முடியாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -