Vijay Romantic Movie : விஜய் நடிப்பில் வெளிவந்த சிறந்த ரொமாண்டிக் படங்கள்!
1997 ஆம் ஆண்டு ஃபாசில் இயக்கத்தில் விஜய் ஷாலினி நடித்து வெளிவந்த காதலுக்கு மரியாதை. ராதாரவி, மணிவண்ணன், சிவகுமார், சார்லி, தாமு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். விஜய்யின் சிறந்த ரொமாண்டிக் படங்களில் இதுவும் ஒன்று.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிஜய், குஷ்பூ, ரம்பா, மணிவண்ணன், கரண், மன்சூர் அலி கான், கோவை சரளா ஆகியோர் நடித்த மின்சார கண்ணா படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார். ஆண்களை வெறுக்கும் குஷ்பூவின் தங்கச்சியை விஜய் எப்படி திருமணம் செய்து கொள்கிறார் என்பதே படத்தின் கதை
2000 ஆம் ஆண்டு செல்வா பாரதி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிரியமானவளே படம். திருமணம் செய்து கொள்ள அக்ரீமெண்ட் செய்து கொண்டால் கணவன் மனைவி வாழ்கை எப்படி இருக்கும் என்பதை இயக்குநர் தெளிவாக விவரித்திருப்பர்.
எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் ஜோதிகா இணைந்து நடித்த படம் குஷி. விஜய்க்கும் ஜோதிகாவுக்கும் விளையாட்டாக நட்பு ஏற்படுகிறது. அதன் பின் ஈகோ காரணமாக பிரிந்து விடுகின்றனர். அந்த ஈகோவே காதலாக மாறிவிடுகிறது. சிறப்பாக திரைக்கதை அமைத்திருப்பார் எஸ் ஜே சூர்யா
கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஷாஜகான். ஒரு தலை காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மணி ஷர்மாவின் சிறப்பான இசை, இதை எவர் க்ரீன் படமாக மாற்றியது என்று கூட சொல்லலாம்.
ரமணா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளிவந்த படம் திருமலை. மெக்கானிக்காக இருக்கும் விஜய்க்கும், தொழிலதிபர் மகளாக இருக்கும் ஜோதிகாவுக்கும் காதல் ஏற்படுகிறது. இவர்களை பிரிக்க வில்லன் வருகிறான். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -